கட்சியும் வேண்டாம், திரைப்படமும் வேண்டாம், பிக்பாஸ் ஒன்றே போதும்: கமல் முடிவு?
மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்த கமல்ஹாசன் வரும் தேர்தலில் சுறுசுறுப்பாக ஈடுபடுவார் என்று எதிர்பார்த்தால் அவர் கட்சி வேலைகளையும் கவனிக்காமல், ’இந்தியன் 2’ உள்பட திரைப்பட வேலையையும் கவனிக்காமல் முழுமூச்சாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் ஈடுபட்டுள்ளது ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும் பெரும் அதிர்ச்சியாக உள்ளது
வரும் 2021ம் ஆண்டு மே மாதம் சட்டமன்ற தேர்தல் வர உள்ளதால் அதிமுக திமுக உள்பட அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் ஈடுபட தொடங்கி விட்டன. ஆனால் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரான கமல்ஹாசனும், அந்த கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களும் தேர்தல் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்
இந்த நிலையில் திடீரென ’இந்தியன் 2’ படம், ’தலைவன் இருக்கின்றான்’ படம் உட்பட எந்த படத்தின் பணிகளையும் கவனிக்காமல் கமல்ஹாசன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் முழு கவனம் செலுத்தி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவருக்கு 150 கோடி வரை சம்பளம் கிடைக்க உள்ளதால் இனிவரும் மூன்று மாதங்களுக்கு அதில் மட்டும் தான் கவனம் செலுத்தினால் போதும் என்ற முடிவில் கமல் இருப்பதாக கூறப்படுகிறது
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் தான் ’இந்தியன் 2’ படப்பிடிப்பு மற்றும் அரசியல் பணிகளில் அவர் ஈடுபடுவார் என்று தெரிகிறது. இதனால் கமலஹாசனின் கட்சியின் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்