1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 31 ஆகஸ்ட் 2020 (19:13 IST)

அரசியலுக்கு மிகப்பெரிய இழப்பு: பிரணாப் மறைவு குறித்து கமல்ஹாசன்

அரசியலுக்கு மிகப்பெரிய இழப்பு:
முன்னாள் குடியரசுத்தலைவர் சற்றுமுன் காலமானதை அடுத்து அவரது மறைவிற்கு குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் உள்பட பல்வேறு தலைவர்களும் அரசியல் கட்சித் பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் 
 
மேலும் தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள், திரையுலகைச் சேர்ந்தவர்கள் என அனைத்து தரப்பினர்களும் முன்னாள் குடியரசுத் தலைவரின் மறைவுக்கு தங்களது இரங்கலை சமூக வலைத்தளங்கள் மூலம் பதிவு செய்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் தனது டுவிட்டரில் பிரணாப் முகர்ஜி அவர்களின் மறைவு இந்திய அரசியலுக்கு மிகப் பெரிய இழப்பு என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
இந்தியாவின் 13 வது குடியரசு தலைராகும் முன்னரே வெளிநாட்டு, பாதுகாப்பு, வர்த்தக மற்றும் நிதி அமைச்சராக இருந்தவர் பிரணாப் அவர்கள். அவர் 5 தசாப்தங்களுக்கும் மேலாக அரசியலில் நீடித்து, தனது புகழ்பெற்ற அரசியல் பயணத்தை மேற்கொண்டவர். அவர் ஒரு வித்தியாசமான அரசியல்வாதி. இந்திய அரசியலுக்கு அவரது மறைவு மிகப்பெரிய இழப்பு’ என்று தெரிவித்துள்ளார்.