ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 31 ஆகஸ்ட் 2020 (20:03 IST)

அரசியல் ராஜதந்திரி ...பிரணாப் முகர்ஜி ஒரு பார்வை !

மேற்கு வங்காளம் மாநிலம்  பிர்பும் என்ற கிராமத்தில் கடந்த 1935 ஆம் ஆண்டு  டிசம்பர் 11  ஆம் தேதி பிறந்தவர் பிரணாப் முகர்ஜி.

இவர் கல்கத்தா பல்கலைக் கழகத்தில் சட்டப் படிப்பை முடித்துள்ளார். கடந்த 1969 ஆம் ஆண்டு இந்தியா காந்தியால் மாநிலங்களை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின் தொடர்ச்சியாக 1975, 1981, 1993, 1999 , 2004, 2009  ஆம் ஆண்டுளிலும் மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டார்,

இவர் கடந்த  1982 -84 ஆம் ஆண்டுவரை நிதியமைச்சராக பணியாற்றியுள்ளார்.  இந்திரா காந்தி மறைவுக்குப் பின் 1986 முதல் 1989 ஆம் ஆண்டுவரை ராஷ்டிரிய சமாஜ்வாடி கட்சியைத் தொடங்கி நடத்தி வந்தார். பின்னர் 2004- 2006 ஆண்டுகளில் பாதுகாப்பு அமைச்சராகாவும், 19995, 96, 2009 ஆம் ஆண்டுகளில் வெளியுறவுத்துறை அமைச்சராகப் பணியாற்றினார். அரசியல் ராஜ தந்திரி என்று அழைக்கப்பட்ட அவர் கடந்த 2012 ஆம் ஆண்டு இந்தியக் குடியரசுத் தேர்தலில் வெற்றி பெற்று இந்தியாவில் 14 வது குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றார்.

இந்த நிலையில் கொரோனா தொற்றால் டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரணாப் சிகிச்சை பலனின்றி காலமானார், காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பிரபல தலைவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்