திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 14 டிசம்பர் 2021 (14:32 IST)

கே.பாக்யராஜ் வைத்த கோரிக்கையை பரிசீலனை செய்வதாக முதல்வர் பதில்!

பழம்பெரும் இயக்குனர் கே.பாக்யராஜ் கோரிக்கையை பரிசீலனை செய்வதாக முதல்வர் பதில் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
 
புதுவை மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சினிமா படப்பிடிப்புக்கு கட்டணம் திடீரென அதிகரிக்கப்பட்டது. இதனை அடுத்து புதுவை மாநிலத்தில் சினிமா படப்பிடிப்புக்கு அதிகரிக்கப்பட்ட கட்டணத்தை குறைக்க வேண்டும் என திரையுலகினர் கோரிக்கை வைத்து வருகின்றனர் 
 
பெரும்பாலும் தமிழ்திரைபடங்கள் புதுவையில் படமாக்கப்படுவதால் தமிழ் திரையுலகைச் சேர்ந்த பலரும் இந்த கோரிக்கையை புதுவை முதல்வருக்கு வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது இயக்குநர் கே பாக்யராஜ் அவர்கள் சினிமா படப்பிடிப்புக்கு புதுச்சேரி அரசு விதிக்கும் வரியை குறைக்குமாறு கோரிக்கை வைத்தார். இதனையடுத்து வரியை குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக புதுவை முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் கே பாக்யராஜ் அவர்களிடம் உறுதி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது