செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 14 டிசம்பர் 2021 (08:01 IST)

தென்னாபிரிக்கா செல்லும் இந்திய அணிக்கு அஸ்வின் துணை கேப்டனா?

தென் ஆப்பிரிக்காவுக்கு செல்லும் இந்திய அணிக்கு தமிழக வீரர் அஸ்வின் துணை கேப்டனாக நியமனம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக ரோஹித் சர்மா நியமனம் செய்யப்பட்டு இருந்தார் ரோகித் சர்மாவுக்கு திடீரென காயம் ஏற்பட்டதை அடுத்து அவர் டெஸ்ட் தொடரில் இருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டது
 
இதனை அடுத்து ரோகித் சர்மாவின் துணை கேப்டன் பதவியை இளம் வீரர் கே.எல்.ராகுல் அல்லது அனுபவ வீரர் அஸ்வின் ஆகிய இருவரில் ஒருவருக்கு தரப்பட வாய்ப்பு இருப்பதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
 
ஏற்கனவே பலமுறை தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் செய்தவர் மற்றும் அனுபவமுள்ள வீரர் என்ற வகையில் அஸ்வினுக்கு துணை கேப்டன் பதவியை வழங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது