வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 12 அக்டோபர் 2017 (16:16 IST)

வருத்தத்தில் கார்த்தி; அண்ணியின் இந்த பதில் தான் காரணமா??

நடிகர் சூர்யாவை காதல் திருமணம் செய்துக்கொண்டார் நடிகை ஜோதிகா. திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிக்காமல் இருந்த ஜோதிகா தற்போது வெள்ளித்திரையில் சில படங்களில் நடித்து வருகிறார்.


 
 
இந்நிலையில், ஜோதிகா நடிப்பில் வெளியான மகளீர் மட்டும் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து சமீபத்தில் பேஸ்புக் லைவ் சேட்டில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.
 
அப்போது ஜோதிகாவிடம் தங்களுக்கு பிடித்த நடிகர் யார் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் எனக்கு சூர்யாவிற்கு பின்பு விஜய் சேதுபதியை பிடிக்கும் என பதில் அளித்துள்ளார்.
 
இதனால், சூர்யாவின் தம்பி கார்த்தி அண்ணி என் பெயரை ஏன் குறிப்பிடவில்லை என வருத்தப்பட்டாராம். விஜய் சேதுபதியும், ஜோதிகாவும் மணிரதனம் படத்தில் நடிக்க இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.