ஜோதிகா படத்தில் இணைந்த பிரபல நடிகை
ஜோதிகா நடிக்க இருக்கும் புதிய படத்தில், பிரபல தெலுங்கு நடிகை லட்சுமி மஞ்சு இணைந்துள்ளார்.
வித்யா பாலன் நடிப்பில் கடந்த வருடம் ரிலீஸாகி சூப்பர் ஹிட்டான படம் ‘தும்ஹரி சுலு’. சுரேஷ் திரிவேணி இயக்கிய இந்தப் படத்தில், ஆர்.ஜே.வாக நடித்திருந்தார் வித்யா பாலன். குடும்பத் தலைவி இரவு நேர ஆர்.ஜே.வாகப் பணியாற்றுவதோடு, குடும்பத்தையும் எப்படி கவனித்துக் கொள்கிறார் என்பதுதான் படத்தின் கதை.
இந்தப் படம், தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. ராதாமோகன் இயக்க, ஜோதிகா ஹீரோயினாக நடிக்கிறார். ‘மொழி’ படத்துக்குப் பிறகு கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் கழித்து இருவரும் இணைந்துள்ளனர். இந்தப் படத்தை பாஃப்டா மீடியா ஒர்க்ஸ் இந்தியா சார்பில் தனஞ்ஜெயன் தயாரிக்கிறார்.
இந்தப் படத்தில், பிரபல தெலுங்கு நடிகை லட்சுமி மஞ்சு நடிக்க இருக்கிறார். இவர் ஏற்கெனவே மணிரத்னம் இயக்கிய ‘கடல்’ உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.