நாச்சியார்’ சக்சஸ் பார்ட்டியில் கலந்துகொண்ட சூர்யா

Naachiyaar
CM| Last Updated: புதன், 28 பிப்ரவரி 2018 (15:43 IST)
‘நாச்சியார்’ படத்தின் சக்சஸ் பார்ட்டியில், சூர்யாவும் கலந்துகொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

 
பாலா இயக்கத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ரிலீஸான படம் ‘நாச்சியார்’. ஜோதிகா, ஜீ.வி.பிரகாஷ், இவானா, ராக்லைன் வெங்கடேஷ் ஆகியோர் நடித்திருந்தனர். பாலாவின் ‘பி ஸ்டுடியோஸ்’ நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்தது. தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, இளையராஜா இசையமைத்திருந்தார்.
 
மக்களிடையே இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. வழக்கமாக வன்முறையைத் தூண்டும் வகையிலேயே பாலா படங்கள் இருக்கும். ஆனால், இந்தப் படம் கொஞ்சம் மென்மையாக இருந்ததால், ரசிகர்களுக்குப் பிடித்துவிட்டது. இந்தப் படத்தின் சக்சஸ் பார்ட்டி சில நாட்களுக்கு முன்பு ரகசியமாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சூர்யாவும் கலந்து கொண்டுள்ளார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :