ஆர்.ஜே.வாக நடிக்கிறார் ஜோதிகா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜோதிகாவின் அடுத்த படத்தில், அவர் ஆர்.ஜே.வாக நடிக்கப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
சுரேஷ் திரிவேணி இயக்கத்தில், வித்யா பாலன் நடிப்பில் கடந்த வருடம் ரிலீஸான ஹிந்திப் படம் ‘துமாரி சுலு’. வித்யா பாலன், ஆர்.ஜே.வாக இந்தப் படத்தில் நடித்திருந்தார். குடும்பத் தலைவி ஒருவர் ஆர்.ஜே.வாக நடத்தும் இரவு நேர நிகழ்ச்சி, நேயர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெறுகிறது. அத்துடன், அவர் குடும்ப வாழ்க்கையையும் எவ்வாறு சிக்கல் இல்லாமல் நடத்தினார் என்பதுதான் படத்தின் கதை. 20 கோடியில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம், 50 கோடிக்கும் அதிகமாகவே வசூலித்துக் கொடுத்தது.
இந்தப் படத்தை, தமிழில் ரீமேக் செய்யப் போகிறார்கள். ராதாமோகன் இயக்கும் இந்தப் படத்தில், வித்யா பாலன் கேரக்டரில் நடிக்கிறார் ஜோதிகா. அவர் ஆர்.ஜே.வாக நடிப்பது இதுதான் முதல்முறை. பாஃப்டா மீடியா ஒர்க்ஸ் இந்தியா நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.