மலையாளத்தில் குதித்த கெளதம் மேனன்
அடுத்த வருடம் மலையாளப் படத்தை இயக்கப் போவதாக இயக்குநர் கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் படங்களை இயக்கியுள்ள கெளதம் மேனன், தன்னுடைய தாய் மொழியான மலையாளத்தில் படம் இயக்கும் ஆசை நாளுக்கு நாள் அதிகமாகி வருவதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மம்மூட்டி, மோகன்லால், துல்கர் சல்மான் ஆகியோரிடம் பேசி வருவதாகத் தெரிவித்துள்ள கெளதம் மேனன், அடுத்த ஆண்டு ஜனவரியில் அதுபற்றிய அறிவிப்பை வெளியிடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழில் விக்ரம் நடிப்பில் ‘துருவ நட்சத்திரம்’ மற்றும் தனுஷ் நடிப்பில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ஆகிய படங்களை இயக்கிவரும் கெளதம் மேனன், பல படங்களைத் தயாரிக்கவும் செய்கிறார். அத்துடன், சில படங்களில் சின்னச் சின்ன வேடங்களில் நடிக்கவும் செய்கிறார். தமிழ் மட்டுமின்றி, மலையாளத்தில் உருவாகியுள்ள ‘நாம்’ படத்திலும் நடித்துள்ளார் கெளதம் மேனன்.