Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சாலையோரம் கடை நடத்தும் பிரபல சீரியல் நடிகை - வைரல் வீடியோ

திங்கள், 9 அக்டோபர் 2017 (15:46 IST)

Widgets Magazine

பிரபல சீரியல் நடிகை கவிதா லட்சுமி தனது மகனின் படிப்பு செலவை சமாளிக்க சாலையோரக் கடையில் தோசை சுட்டு விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதலங்களில் வேகமாக பரவி வருகிறது.

 
மலையாள தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் கவிதா லட்சுமி. ஏசியாநெட் டிவியில் ஒளிபரப்பான ஸ்த்ரீதனம்  தொடர் மூலம் மிகவும் பிரபலமானார். அவர் தற்போது கே.கே. ராஜீவ் இயக்கி வரும் அயலத்தே சுந்தரி என்ற டிவி தொடரில்  நடித்து வருகிறார். 
 
இந்நிலையில் கவிதா லட்சுமியின் மகன் வெளிநாட்டில் படித்துக் கொண்டிருக்கிறார். அவரின் கல்லூரி கட்டணத்திற்காக கவிதா வங்கிகளில் கல்விக்கடன் கேட்டு கிடைக்கவில்லை. இந்நிலையில் டிவி தொடர்களில் நடித்து கிடைக்கும் பணத்தை மட்டும்  வைத்து மகனின் படிப்பு செலவை சமாளிக்க முடியாததால், கூடுதலாக ஏதாவது வேலை செய்ய முடிவு செய்து இவ்வாறு  சாலையோரக் கடை நடத்தி வருகிறார். 
 
தனக்கு நன்றாக தோசை சுட தெரியும் என்பதால் அதையே தொழிலாக செய்து பணம் சம்பாதிக்கிறார், சீரியல் நடிகை கவிதா.  சாலையோரக் கடையில் அவர் தோசை சுடுவதை பார்த்த பலரும் வியப்படைந்தனர்.
 
கவிதா லட்சுமி தோசை சுடும்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
 
நன்றி: Raj Kiran


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

நடிகர் சங்க எலெக்ஷனில் போட்டியிடுவாரா வம்பு?

அடுத்த வருடம் நடைபெற இருக்கும் நடிகர் சங்க எலெக்ஷனில் வம்பு போட்டியிடுவாரா என்ற ...

news

ஸ்கெட்ச் படத்தின் ரிலிஸ் தேதியை வெளியிட்ட இயக்குநர்

விஜய் சந்தர் இயக்கம், விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் படம் 'ஸ்கெட்ச்'. இப்படம் ரசிகர்கள் ...

news

சோலோவை சாகடிக்காதீர்கள்; உருகிய துல்கர் சல்மான்

பிஜாய் நம்பியார் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான சோலோ திரைப்படம் குறித்து ...

news

அஜித்தைப் பின்னுக்குத் தள்ளிய விஜய்

அதிக தியேட்டர்களில் ரிலீஸாவதன் மூலம், அஜித்தைப் பின்னுக்குத் தள்ளி முன்னால் ...

Widgets Magazine Widgets Magazine