"புரமோஷன் பண்றதை விட்டுட்டு நல்ல படத்துல நடிக்கலாம்”
புரமோஷன் பண்றதை விட்டுட்டு நல்ல படத்துல நடிக்கலாம் என விஷ்ணு விஷாலுக்கு ரசிகர் ஒருவர் அறிவுரை கூறியுள்ளார்.
விஷ்ணு விஷால், கேத்ரின் தெரேசா, சூரி நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ‘கதாநாயகன்’. மசாலா படமான இதை, முருகானந்தம் இயக்கியிருந்தார்.
விஷ்ணு விஷாலே இந்தப் படத்தை சொந்தமாகத் தயாரித்திருந்ததால், படத்துக்கு ஏகப்பட்ட பப்ளிசிட்டி செய்திருந்தார். ஆனால், எல்லாத் தரப்பினருக்கும் படம் பிடிக்கவில்லை.
“புரமோஷன் பண்றதை விட்டுட்டு நல்ல படத்துல நடிக்கலாம்” என ஒரு ரசிகர் ட்விட்டரில் கூற, அதற்கு உடனடியாகப் பதில் அளித்திருக்கிறார் விஷ்ணு விஷால்.
“முழுவதுமாக வாஷ் அவுட் ஆகவில்லை. பப்ளிசிட்டிக்கும் குறைவாகவே செலவு செய்திருக்கிறேன். நன்றி” எனத் தெரிவித்துள்ளார் விஷ்ணு விஷால்.