1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வியாழன், 14 செப்டம்பர் 2017 (06:57 IST)

துப்பறிவாளன்' படம் எப்படி? வெளிநாட்டு ரசிகர்களின் விமர்சனம்

q

விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கிய 'துப்பறிவாளன்' படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் பிரிமியர் காட்சி தற்போது அமெரிக்காவில் ஓடிக்கொண்டிருக்கின்றது.



 
 
இந்த படத்தின் விமர்சனங்களை ரசிகர்கள் டுவிட்டரில் பதிவு செய்து வருகின்றனர். படத்தின் முதல் பாதி படுவிறுவிறுப்பாக இருப்பதாகவும், இசை, ஒளிப்பதிவு ஆகியவை படத்தின் பிளஸ் பாயிண்டாக இருப்பதாகவும் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
 
மேலும் இண்டர்வெல் டுவிஸ்ட், விஷாலின் மேனரிசம் ரசிக்கும் வகையில் இருப்பதாகவும், விஷாலுக்கு இந்த படம் நிச்சயம் ஒரு வெற்றிப்படம் தான் என்று டுவிட்டரில் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.இதனால் விஷால் ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.