செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 26 டிசம்பர் 2017 (22:59 IST)

வருடத்தின் கடைசி நாளில் பாய தயாராகும் தனுஷ்

தனுஷ் நடிப்பில் நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ள படம் 'எனை நோக்கி பாயும் தோட்டா. இந்த படத்தை தயாரித்து இயக்கும் கவுதம் மேனனை வேண்டுமென்றே தனுஷ் காக்க வைப்பதாக ஒரு குற்றச்சாட்டும் உள்ளது. சரியாக பத்து நாள் கால்ஷீட் கொடுத்தால் கவுதம்மேனன் இந்த படத்தை முடித்துவிடுவார், ஆனால் இந்த படம் கடந்த இரண்டு வருடங்களாக நீண்டு கொண்டிருப்பதற்கு தனுஷே காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஒருவழியாக தற்போது இந்த படத்தை முடித்து கொடுக்க தனுஷ் முடிவு செய்துள்ளதால் கவுதம்மேனன் தரப்பு சந்தோஷத்தில் உள்ளது.

இந்த நிலையில் மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதை அடுத்து இந்த படத்தின் 3வது சிங்கிள் பாடலான 'விசிறி' என்னும் சிங்கிள் ட்ராக் பாடல் இந்த வருடத்தின் கடைசி நாளான டிசம்பர் 31-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.. வருடத்தின் கடைசி நாளில் பாட்டு வடிவில் பாய இருக்கும் தனுஷை வரவேற்க அவரது ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.