வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By

இணையதளத்தை பரபரப்பாக்கிய சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'காலா' செகண்ட்லுக்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி வரும் நிலையில் அவர் நடித்த 'காலா' திரைப்படத்தின் செகண்ட் லுக்கை அவருடைய மருமகனும், பிரபல நடிகருமான தனுஷ் தனது டுவிட்டரில் வெளியிட்டு ரஜினி ரசிகர்களுக்கு சி'றப்பு பிறந்த நாள் பரிசினை அளித்துள்ளார்

ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான காலா' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சமூக வலைத்தளங்களில் சுனாமியை கிளப்பிய நிலையில் இன்று அதிகாலை சரியாக 12 மணிக்கு வெளியான இந்த படத்தின் செகண்ட்லுக், ஃபேஸ்புக், டுவிட்டர் உள்பட அனைத்து சமூக வலைத்தளங்களிலும் டிரெண்ட் ஆகியுள்ளது.

காலா' செகண்ட்லுக் வெளியான ஒருசில நிமிடங்களில் டுவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டிலும், சில மணி நேரத்தில் உலக அளவிலும் டிரெண்டிலும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் 'காலா' திரைப்படம் ரஜினியின் இன்னொரு படமான '2.0' படம் ரிலீஸ் ஆனதும் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.