ஓடிடியிலும் கலக்கும் துல்கர் சல்மானினின் லக்கி பாஸ்கர்.. டிரண்ட்டிங்கில் நம்பர் 1!
சீதாராமம் படத்தின் வெற்றியின் மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்ட நடிகரானார் துல்கர் சல்மான். அதனால் அவர் நடிக்கும் படங்கள் இப்போது தென்னிந்தியா முழுவதும் ரிலீஸாகின்றன. அவர் நடிப்பில் உருவான லக்கி பாஸ்கர் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு ரிலீஸானது. இந்த படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமா ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. பீரியட் படமாக உருவாகியுள்ள வரும் இந்த படத்தில் வங்கி ஊழியராக துல்கர் சல்மான் நடித்துள்ளார்.
பங்குச் சந்தை ஊழலில் வங்கிகளின் பங்கு என்ன என்பது குறித்து இந்த படம் பேசியுள்ளது. விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த இந்த படம் துல்கர் சல்மானின் கேரியரில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது. இதையடுத்து கடந்த வாரம் இந்த படம் ஓடிடியில் ரிலீஸானது.
திரையரங்குகளில் வெற்றி பெற்றது போலவே இந்த படம் தற்போது ஓடிடியிலும் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்று வருகிறது. படத்தின் பல காட்சிகள் சமூகவலைதளங்களில் பரப்பப்பட்டு கொண்டாடப்பட்டு வருகின்றன. இதையடுத்து படம் நெட்பிளிக்ஸில் டிரண்ட்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.