1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 7 மார்ச் 2018 (16:25 IST)

கார்த்திக் சுப்புராஜூக்கு கைகொடுத்த தனுஷ்

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளதாக ஒரு திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகளும் தொடங்கிய நிலையில் தான் திடீரென சூப்பர் ஸ்டார் ரஜினியின் படத்தை இயக்கும் வாய்ப்பு கார்த்திக் சுப்புராஜூக்கு கிடைத்தது. இதனால் அவர் தனுஷ் படத்தை கைவிட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி முடித்துள்ள 'மெர்க்குரி' படத்தின் டீசரை தனுஷ் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். வசனமே இல்லாமல் த்ரில் படமாக உருவாகியுள்ள இந்த படம் வரும் 13ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

பிரபுதேவா, சனத் ரெட்டி, தீபக் பரமேஷ், ரம்யா நம்பீசன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். திரு ஒளிப்பதிவில் விவேக் ஹர்சன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரித்துள்ளது.