காலாவுக்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட தனுஷ்

Last Updated: வியாழன், 1 மார்ச் 2018 (22:34 IST)
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படத்தின் டீசர் இன்று காலை 11மணிக்கு வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் சங்கரர் மறைவின்  காரணமாக இந்த டீசர் வெளியாகும் நாள் ஒருநாள் தள்ளி வைக்கப்படுவதாக இந்த படத்தின் தயாரிப்பாளரும், ரஜினியின் மருமகனுமான தனுஷ் தனது  டுவிட்டரில் அறிவித்தார்.
இந்நிலையில் இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 27-ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'காலா' படத்தின் டீசர் மார்ச் மாதம் 1-ம்  தேதி (இன்று) வெளியாக இருந்தது. ஆனால் நேற்று காலை காஞ்சிபுரம் சங்கரமட பீடாதிபதி ஜெயேந்திரர் மூச்சுத்திணறல் காரணமாக சிகிச்சை பலனின்றி  மரணமடைந்தார். அவரின் மரணத்துக்கு இறுதி மரியாதை அளிக்கும் விதமாக 'காலா' படத்தின் டீசரை மார்ச் 2-ம் தேதி வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார்  படத்தின் தயாரிப்பாளர் தனுஷ்.
டீசருக்காக ஆவலாகக் காத்திருந்த ரசிகர்களை வருத்தமடையச் செய்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார் தனுஷ். இந்த அறிவிப்பு ரஜினி ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படத்தின் டீசர் வெளியாகும் நேரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.


இதில் மேலும் படிக்கவும் :