ரஜினியின் காலா பட டீசர் வெளியீடு; ரசிகர்கள் உற்சாகம்

Last Updated: வெள்ளி, 2 மார்ச் 2018 (22:34 IST)
பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் டீசரை அப்படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான தனுஷ் இன்று  வெளியிட்டார். 
காலா படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தை ஏப்ரல் 27-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் டீசர் மார்ச் 1ம் தேதி வெளியிடும் என்று தனுஷ் அறிவித்திருந்தார். பின்னர் ஜத்குரு பூஜயஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்யாவின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக  ‘காலா’ டீசர் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டு இன்று (மார்ச் 2ம் தேதி) காலை 10 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்திருந்தார்.
 
இந்நிலையில், இரவு 12 மணியளவில் காலா டீசரை தனது டுவிட்டர் பக்கத்தில் தனுஷ் வெளியிட்டார்.webdunia

இதில் மேலும் படிக்கவும் :