திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (11:06 IST)

குழந்தைகளை சந்திக்காமல் இருக்க சதி: இமான் முன்னாள் மனைவி மீது வழக்கு!

முன்னாள் மனைவி மோனிகாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி இமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

 
தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு படங்களுக்கு இசையமைத்து வருபவர் இசையமைப்பாளர் டி.இமான். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழி படங்களுக்கும் இசையமைத்துள்ளார் டி.இமான். 
 
இந்நிலையில் இவர் கடந்த டிசம்பர் மாதம் டிவிட்டரில் டி. இமான் தானும், தனது மனைவி மோனிகா ரிச்சர்டும் விவாகாரத்து செய்து கொண்டதாக தெரிவித்தார். இந்த தனிப்பட்ட விவகாரத்தை ஊடகங்கள், ரசிகர்கள் ஆகியோர் மதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மனைவி மோனிகாவிடமிருந்து விவாகரத்து பெற்ற இசையமைப்பாளர் இமான் தன் குழந்தைகளை சந்திக்க குடும்பநல நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. 
 
எனவே இரு குழந்தைகளின் பாஸ்போர்ட்களையும் இமான் வைத்திருந்தார். இந்நிலையில், குழந்தைகளின் பாஸ்போர்ட்கள் தொலைந்து விட்டதாக தவறான தகவலை கூறி, புதிய பாஸ்போர்ட் பெற்றுள்ளார் இமானின் முன்னாள் மனைவி மோனிகா. 
 
இதனால் மோனிகாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி இமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். நான் குழந்தைகளை சந்திக்காமல் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அதற்கு வழிவகை செய்யும் வகையில் அவர்களை வெளிநாடு அனுப்புவதற்காக இப்படி தவறான தகவலை அளித்து புதிய பாஸ்போர்ட் பெற்றுள்ளார் மோனிகா என டி.இமான் தெரிவித்துள்ளார்.