1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (19:51 IST)

நவம்பரில் ‘குக் வித் கோமாளி’ மூன்றாவது சீசனா?

‘குக்  வித் கோமாளி சீசன் 1 மற்றும் சீசன் 2 ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பாக சீசன் 2வில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் திரையுலகில் வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
‘குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பவித்ரா, தர்ஷா, அஸ்வின், புகழ், ஷிவாங்கி, பாலா ஆகியோர் தற்போது சினிமாவில் பிசியாக உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அடுத்த சீசனுக்கு புகழ், சிவாங்கி உள்பட ஒரு சில கோமாளிகள் வருவார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் ‘குக் வித் கோமாளி சீசன் 3 நவம்பர் மாதம் தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும் இதற்கான போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது
 
ஆனால் அதேநேரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அக்டோபர் 3-ம் தொடங்கி ஜனவரியில் முடியும் என்பதால் ஜனவரிக்கு பின்னர்தான் ‘குக் வித் கோமாளி ஆரம்பமாக வாய்ப்பு இருப்பதாகவும் சிலர் கூறி வருகின்றனர்.