வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (15:59 IST)

டிக்கிலோனா படத்துலேயே அவர் மட்டும்தான் வொர்த்து… காமெடி நடிகரைப் புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்!

லொள்ளு சபா நடிகர் மாறன் டிக்கிலோனா படத்தில் சிறப்பாக நடித்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

சந்தானம் மூன்று வேடத்தில் நடித்த ’டிக்கிலோனா’ என்ற திரைப்படத்தை கார்த்திக் யோகி இயக்கி இருந்தார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே முடிந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. சந்தானம் ஜோடியாக அனைகா, ஷிரின் ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தில் ஹர்பஜன் சிங், யோகிபாபு, ஆனந்தராஜ், நிழல்கள் ரவி, மொட்ட ராஜேந்திரன், முனிஸ்காந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் கலவையான விமர்சனங்கள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. இந்நிலையில் இப்போது படத்தில் சந்தானம் மாற்றுத்திறனாளி ஒருவரை கிண்டல் செய்து பேசும் வசனத்துக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன. தொடர்ந்து தன் படங்களில் சந்தானம் இதுபோல body shaming வசனங்களை பேசி வருவது ரசிகர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.

இந்நிலையில் படத்தில் நகைச்சுவை நடிகர் மாறன் வரும் காட்சிகள் மட்டுமே நகைச்சுவையாக இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் திறமையான நடிகரான அவர் இன்னும் தமிழ் சினிமாவில் சரியாக அங்கிகரிக்கப்படவில்லை என்றும் வருத்தத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.