1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 6 செப்டம்பர் 2021 (16:43 IST)

எங்க சிரி பாப்போம் நிகழ்ச்சியில் ஜெயித்தது எவ்வளவு? புகழ் அளித்த விளக்கம்!

குக் வித் கோமளி நிகழ்ச்சி மூலமாக பிரபலமான புகழ் இப்போது பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் புகழ். இதையடுத்து அவருக்கு சினிமா வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துள்ளன. வலிமை படத்தில் அஜித்துடன் நடிக்கும் அளவுக்கு ஒரே நாளில் உச்சத்துக்கு சென்றார். இப்போது 10 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அமேசான் ப்ரைம் தளத்தில் உருவான நகைச்சுவை நிகழ்ச்சியான எங்க சிரி பாப்போம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றார். அதற்காக அவருக்கு 25 லட்சம் ரூபாய் பரிசுத் தொகைக் கொடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

ஆனால் அதை மறுத்துள்ள புகழ் அந்த நிகழ்ச்சியில் இருவர் ஜெயித்தோம். அதனால் பரிசுத்தொகையை இரண்டாகப் பிரித்து ஆளுக்கு 12.5 லட்சம் கொடுத்தார்கள். அதிலும் டிடிஎஸ் பிடித்தம் போக 7 லட்சம் தான் கைக்கு வந்தது எனக் கூறியுள்ளார்.