திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Modified: சனி, 10 மார்ச் 2018 (11:09 IST)

சீரியலில் நடிக்கிறார் பாபி சிம்ஹா

புதிதாகத் தொடங்க இருக்கும் வெப் சீரியலில் நடிக்க கமிட்டாகியுள்ளார் பாபி சிம்ஹா. 
வெளிநாடுகளில் தான் வெப் சீரியல் பிரபலமாக இருந்தது. தமிழில் பாலாஜி மோகன் இயக்கிய ‘ஆஸ் ஐ யாம் சஃபரிங் ப்ரம் காதல்’ வெப் சீரியலுக்கு பயங்கர வரவேற்பு கிடைத்தது. வெப் சீரியலுக்கு தணிக்கை கிடையாது என்பதால், தாங்கள் நினைத்த எல்லாவற்றையும் முயற்சித்துப் பார்க்கும் ஸ்பேஸ்  இயக்குநர்களுக்கு கிடைக்கிறது.
 
இதனால், தற்போது ஏகப்பட்ட வெப் சீரியல்கள் தமிழில் உருவாகி வருகின்றன. அந்த வரிசையில், பாபி சிம்ஹாவும் ஒரு சீரியலில் நடிக்கிறார். அவருக்கு  ஜோடியாக பார்வதி நாயர் நடிக்கிறார். ‘ஜிகர்தண்டா’ போல பயங்கரமான வில்லனாக நடிக்கிறாராம் பாபி சிம்ஹா. பிளாக் ஹியூமர் ஜானரில் இந்த சீரியல் உருவாகிறது. ‘ஜோக்கர்’, ‘அருவி’ படங்களைத் தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த சீரியலைத் தயாரிக்கிறது.