1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 24 பிப்ரவரி 2018 (12:54 IST)

துல்கர் சல்மான் படத்தில் கமிட்டான தொகுப்பாளர் ரக்‌ஷன்; வைரல் வீடியோ

மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் மகனும், நடிகருமான துல்கர் சல்மான் தனது 25வது படத்தை தமிழில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என தலைப்பிடப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் காதலர் தினத்தன்று வெளிவந்தது.   ரீது வர்மா துல்கருக்கு ஜோடியாக இப்படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
 
தொகுப்பாளராக கலக்கி வரும் பல பிரபலங்கள் தற்போது சினிமா கலக்க ஆரம்பித்துவிட்டனர். இந்நிலையில் விஜய் டி.வியில் கலக்கப்போவது யாரு  நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வரும் ரக்‌ஷன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக துல்கர் சல்மான  தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட  வீடியோ ஒன்றில் கூறியுள்ளார். ஏற்கனவே, அதே நிகழ்ச்சியை தொகுத்து வரும் ஜாக்குலின் நயன்தாரா நடித்து வரும் 'கோலமாவு கோகிலா' படத்தில் நடித்து  வருவது குறிப்பிடத்தக்கது.