திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (17:32 IST)

பிரபல சீரியலில் இருந்து விலகிய நடிகை !

பிரபல தனியார் சேனலில் ஒளிபரப்பாகும் சீரியல் தொடரில் இருந்து பிரபல நடிகை வெளியேற உள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான அப்டம் வேலைன்னு வந்துட்ட வெள்ளைக்காரன் என்ற படம். இதில் புஷ்பா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துப் பிரபலமானவர் ரேஷ்மா பசுபலேட்டி.

இப்படம் வெற்றி பெற்றதுடன் அவரது கதாப்பாத்திரமும் நடிப்பு பேசப்பட்டது. எனவே, அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு மக்களிடம் பிரபலம் ஆனார்.

தற்போது அவர் அன்பே வா என்ற தொடரில் நடித்து வரும் நிலைய்ல், அவரது ரேஷ்மா என்ற கதாப்பாத்திரம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இந்தச் சீரியலில் இருந்து அவர்  வெளியேற உள்ளதாகத் தகவல் வெளியாகிறது. மேலும்,அவருக்குப் பதிலாக வினோதினி என்ற நடிகை நடிக்கவுள்ளதாகவும் ரேஷ்மா பாக்கியலட்சுமி என்ற தொடரில்  நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.