செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Updated : செவ்வாய், 27 ஜூலை 2021 (16:32 IST)

அஜித் நடிப்பில் எம் ஜி ஆர் பட ரீமேக்… கடைசி நேரத்தில் கைவிட்டுப் போன வாய்ப்பு!

தன் இயக்கத்தில் அஜித் அன்பே வா படத்தை ரீமேக் செய்ய இருந்ததாக இயக்குனர் செல்வா தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜித்தை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் செல்வா. ஆனால் அதன் பிறகு பல முறை அவர்கள் இணையும் வாய்ப்பு இருந்தும் அது கைகூடவே இல்லை. இந்நிலையில் நான் அவன் இல்லை படத்தின் வெற்றிக்குப் பின்னர் இருவரும் ஒரு படத்தில் இணைய இருந்தனர்.

அப்போது அஜித் ரீமேக் படங்களில் ஆர்வம் காட்டி வந்த நேரம் என்பதால் எம் ஜி ஆரின் சூப்பர் ஹிட் படமான அன்பே வா படத்தை ரீமேக் செய்யலாம் என நினைத்து அந்த படத்தை இயக்குனர் செல்வாவை இயக்கக் கேட்டாராம். ஆனால் பின்னர் அஜித் தரப்பில் அந்த முடிவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துப் போக  விரும்பவில்லை என்பதால் அந்த படம் நடக்கவில்லை என இயக்குனர் செல்வா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.