ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By VM
Last Updated : வியாழன், 4 அக்டோபர் 2018 (20:50 IST)

நடிகர் விஜய் கூறியது சரிதான்: டி.ராஜேந்தர் 'மெர்சல்' பேட்டி

நாட்டில் ஊழல் தலைவிரித்தாடுவதாக நடிகர் விஜய் கூறியது சரிதான் என லட்சிய திராவிட முன்னேற்ற கழக தலைவர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். சர்கார் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியபோது ஊழல் தலைவிரித்தாடுவதாக கூறினார். 
இதனை  வரவேற்று  டி.ஆர். ராஜேந்தர் நேற்று கருத்து தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:- நடிகர் விஜய் சொல்ற மாதிரி  நாட்டில் ஊழல், லஞ்சம் இல்லை என நீங்கள் நினைக்கிறீர்களா?  விஜய் சொன்னது சரி. நாட்டில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. தலையும் பூவும் சேர்ந்தால் தான் நாணயம் செல்லும். தலைமை சரியில்லாத எந்த ஆட்சியும் செல்லாது. ஈபிஎஸ்-ஓபிஎஸ் எல்லாம் இன்று தனியாக நின்று தேர்தலில் ஜெயிக்க முடியுமா?.
 
எல்லாம் அம்மா வாங்கி வச்ச ஓட்டை வைத்து கொண்டு இவர்கள் ஏதேதோ செய்கிறார்கள். சினிமாக்காரர்களை விட ஈபிஎஸ், ஓபிஎஸ், அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு சொத்துகள் ஜாஸ்தி. வருமான வரி ரெய்டு வந்தாலும் அந்த பணம் எங்கே போகிறது என தெரியவில்லை.  விஜய்க்கு இன்று தமிழகத்தில் மன்றங்கள் அதிகம். இதற்கு அடுத்து தமிழகத்தில் சிலம்பரசனுக்குத்தான் மன்றங்கள் அதிகம். உடனே சிம்புவுக்கு மன்றங்கள்  இல்லைனு சொன்னா சொல்லிக்கோங்க.
 
நாங்கள் ஆட்சிக்கு வருகிறோமோ இல்லையோ, ஆனால் நாங்கள் நினைக்கிறவர்கள்தான் ஆட்சிக்கு வர முடியும் என்ற நிலையை உருவாகும். டி ராஜேந்தருக்கு என தனி இடம் தாய்மார்களிடம் உள்ளது. எனவே அவர்களிடம் என்னால் ஓட்டு வாங்கிட முடியும்.
 
டி ராஜேந்தர் மைக்கை கூட தொட்டு பேசுவேன். ஆனால் கதாநாயகிகளை தொட்டு பேச மாட்டேன். எப்படி மைக்கை பிடிக்கணும், எப்படி வோட்டு வாங்கணும்  என்று எல்லாம் எனக்கு தெரியும். தலைவர் கருணாநிதி உயிரோடு இருந்ததால் தலை இருக்கும் போது வால் ஆட கூடாது என்று பொறுமையாக இருந்தேன்.
 
ஆகஸ்ட் 7-ஆம் தேதியுடன் பழைய சாப்டர் ஓவர். அதன்பிறகு புது சேப்டரில் நான் என்ன செய்ய போகிறேன் என்பதை சொல்ல மாட்டேன். செய்து  காண்பிக்கிறேன்.  இவ்வாறு அவர் கூறினார்.