செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By VM
Last Updated : புதன், 3 அக்டோபர் 2018 (16:17 IST)

அடிபடாமல் இருந்தால் மகனே உன் சமத்து: விஜய்க்கு உதயக்குமார் அட்வைஸ்

மதுரையில்  அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களுக்க பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறுகையில், “நடிகர் விஜய் அரசியலில் எப்போது குதிக்கலாம் என்று  பார்க்கிறார். அவரும் குதிக்க முயற்சிக்கிறார். ஆனால் முடியவே இல்லை. அவரது அப்பாவும் வலையெல்லாம் போட்டு வைத்து, குதிப்பா நான் பார்த்துக்கிறேன்னு சொல்றாரு ஆனால் விஜய் குதிக்க பயப்படுகிறார்.
இப்போது அவருக்குத் தைரியம் இருந்தால் குதிக்கட்டும். அடிபடாமல் இருந்தால் மகனே உன் சமத்து. விஜய்க்கு அரசியல் தெரியவில்லை. ஏதோ சில ரசிகர்கள் வந்தால் அவர் தன்னை எம்ஜிஆர்போல் நினைத்துக் கொள்கிறார்.
 
தமிழ்நாட்டில் இப்ப ஒரு அரசியல் ட்ரெண்ட் உருவாகியுள்ளது. யார் வந்தாலும் அதிமுக அரசைக் குறை சொன்னால் அவர்கள் ஹீரோ ஆகிவிடுகிறார்கள். எடப்பாடி, ஓபிஎஸ் சாமானியன்தானே வாங்க ரெண்டு திட்டு திட்டிப் பார்ப்போம். ஊடகங்கள் முக்கியத்துவம் தருவாங்கன்னு நினைத்து வந்து திட்டுகிறார்கள்.
 
அப்படித் திட்டுவது எங்களை அல்ல இந்த தமிழ்நாட்டு மக்களை. அதனால் அது எங்களைச் சேராது, அதெல்லாம் அவர்களையே சேரும். திடீர்னு வந்து யாராவது எழுதிக்கொடுத்த வசனத்தைப் பேசுவது. உங்களுடைய ரோல் என்ன, என்ன வசனம் எழுதிக் கொடுக்கிறார்களோ அந்த வேடத்துக்கு ஏற்றார்போல் வசனத்தைப்  பேசுவது உங்கள் வேலை.
 
அதைச் சரியாகப் பாருங்கள், நாங்கதான் நாட்டைச் சரியா பார்த்துக் கொள்கிறோமே, உங்களுக்கு என்ன கவலை. மக்கள் உங்களிடம் சொன்னார்களா? விஜய் சார், விஜய் சார் இந்த நாட்டுல, எதுவுமே சரியில்ல, நீங்க ஏன் நடிக்கப் போகிறீர்கள், வாங்க அரசியலுக்கு என்று கூப்பிட்டார்களா?
 
விஜய் சொல்கிறார், நான் முதல்வரானால் நடிக்க மாட்டேன் என்கிறார். நீங்கள் முதல்வராக வேஷம் கட்டலாம், அதை மக்கள் பார்த்து ரசிப்பார்கள். ஆனால் முதல்வராகச் செயல்படுவது சாதாரண காரியமல்ல, நீங்கள் ஒரு மணி நேரம் வசனம் பேசிவிட்டு மூன்று மணி நேரம் கேரவனில் ரெஸ்ட் எடுப்பவர்கள்.
 
விஜய்க்கு இந்த நீண்ட விளக்கம் போதும் என்று நினைக்கிறேன். ஆகவே தம்பி விஜய் சர்க்கஸ் காட்டுவதைத் தொடர்ந்து காட்டட்டும் அதில் ஒன்றும் மாற்றுக்கருத்தில்லை.” இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.