1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: செவ்வாய், 2 அக்டோபர் 2018 (10:31 IST)

இன்று சர்கார் இசை வெளியீட்டு விழாவில் இன்ப அதிர்ச்சி தரப்போகும் ஏ.ஆர்.ரகுமான்!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் படம் 'சர்கார்' .


இந்த படத்தின் முதல் சிங்கிள் ட்ராக்கான 'சிம்டாங்கரன்' பாடலுக்கு கலவையான விமர்சனங்கள் வந்தது. எனினும் 1.5கோடி  பார்வையை தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஒரு வரல் பாடலும் வெளியாகியது. இது யூடியூப் டிரெண்டிங்கில் உள்ளது.

இந்நிலையில் இன்று நடக்கவுள்ள 'சர்கார்' இசை வெளியீட்டு விழாவையொட்டி படத்தின் ஐந்து பாடல்கள் கொண்ட டிராக் லிஸ்டை நேற்று  படக்குழு வெளியிட்டது.  இன்றைய விழாவில் தமிழின் பாரம்பரிய இசையையும் அதன் வரலாற்று பின்னணியையும் பற்றிய வீடியோவை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட இருக்கிறார், . இதனை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டிருந்தார்.