ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 21 பிப்ரவரி 2019 (16:21 IST)

நானும் ரௌடிதான் - சிறப்பான, தரமான சம்பவம் செய்த புஜாரா !

இந்திய அணியின் டெஸ்ட் வீரர் என்று முத்திரைக் குத்தப்பட்ட செதீஷ்வர் புஜாரா டி 20 போட்டிகளிலும் தான் ஒரு சிறந்த வீரர் என கிரிக்கெட் உலகிற்கு நிரூபித்துள்ளார்.

புஜாரா டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை தன்னை அடுத்த டிராவிட் (சுவர்) என நிரூபித்து விட்டார். அதற்கு சமீபத்தில் நடந்த இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் அவரின் பேட்டிங்கே சான்று. ஆனால் ஒரு நாள் மற்றும் டி 20 போட்டிகளில் இன்னும் அவருக்கு சரியான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.

ஒருநாள் போட்டிகளில் மிக சொற்பமாக விளையாடியும் டி 20 போட்டிகளில் இன்னும் இந்தியாவிற்காக விளையாடமலும் இருக்கிறார் புஜாரா. ஐபிஎல் போட்டிகளில் கடந்த சில ஆண்டுகளாக அவர் பெயர் ஏலத்தில் அறிவிக்கப்பட்டாலும் எந்த அணியும் அவரை எடுக்க முன்வருவதில்லை. அதற்குக் காரணம் புஜாரா ஒரு டெஸ்ட் வீரர் மட்டுமே. அவரால் ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் சூழ்நிலைக்கேற்றவாறு அதிரடியாக விளையாடி ரன் குவிக்க முடியாது என்பதுதான்.

ஆனால் தற்போது சம்பவம் ஒன்றின் மூலம் தன்னாலும் டி 20 போட்டிகளில் அதிரடியாக விளையாட முடியும் என நிரூபித்து உள்ளார். இந்தூரில் இன்று நடந்த முஷ்டாக் அலி டி20 போட்டியில் ரயில்வேஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் புஜாரா  61 பந்துகளில் புஜாரா சதம் அடித்து அசத்தியுள்ளார். இந்த சதத்தில் 14 பவுண்டரிகளும் 1 சிக்ஸரும் அடக்கம். புஜாரா சிறப்பாக விளையாடி சதம் அடித்திருந்தாலும் அவரின் சௌராஷ்டிரா 5 விக்கெட்டில் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆனாலும் புஜாராவின் இந்த அதிரடி சதத்தால் கிரிகெட் ரசிகர்கள் அவரைப் பாராட்டி வருகின்றனர்.