விராட் கோஹ்லியை வீழ்த்த இங்கிலாந்து அணிக்கு முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் அறி்வுரை

Vaughan
Last Updated: செவ்வாய், 31 ஜூலை 2018 (19:13 IST)
இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லியை வீழ்த்த இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் அறிவுரை வழங்கியுள்ளார்.

 
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டி20 மற்றும் ஒருநாள் தொடர்கள் முடிவடைந்த நிலையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை முதல் தொடங்குகிறது.
 
ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததால் டெஸ்ட் தொடரில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான ஆண்டர்சன் மற்றும் பிராட் ஆகியோருக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
 
இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தற்போது உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மான உள்ளார். மேலும் எதிர் அணிகளுக்கு ஆபத்தானவராகவும் உள்ளார். 
 
இவரை வேகப்பந்து வீச்சாளர்கள் எப்படி வீழ்த்த வேண்டும் வாகன் அறிவுரை வழங்கியுள்ளார். 20014ஆம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியபோது விராட் கோஹ்லி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :