40 நிமிடங்களில் போட்டியை முடித்த கப்தில்: என்னா பேட்டிங்....!

Last Modified சனி, 28 ஜூலை 2018 (16:45 IST)
இங்கிலாந்தின் நார்த்தாம்டன் நகரில் உள்ள கவுண்டி மைதானத்தில் நேற்று வோர்செஸ்டர்ஷையர் அணிக்கும், நார்த்தாம்டன்ஷையர் அணிக்கும் இடையிலான டி20 போட்டி நடந்தது. 
போட்டியின் முதலில் பேட் செய்த நார்த்தாம்டன்ஷையர் அணி 188 ரன்கள் குவித்தது. 189 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய வோர்செஸ்டர்ஷையர் அணி 13.1 ஓவர்களில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
இந்த போட்டியை கப்தில் 38 பந்துகளில் 102 ரன்கள் சேர்த்து 40 நிமிடங்களில் முடித்துவிட்டார். 20 பந்துகளில் அரைசதமும், 35 பந்துகளில் சதமும் அடித்து மிரள வைத்தார். இதில் 12 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் அடக்கம்.  
 
மேலும், டி20 போட்டியில் இதுவரை அதிகவேகமாக, குறைந்த பந்துகளில் சதம் அடித்தவர் என்ற சாதனையை கிறிஸ் கெயில் தக்கவைத்திருந்தார் தற்போது இவருடன் கப்தில் இணைந்துள்ளார். 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :