ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்.. இந்தியா அபார வெற்றி..!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் பெர்த் நகரில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி முதலாவது டெஸ்ட் போட்டியை கடந்த 22ஆம் தேதி விளையாட தொடங்கியது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 150 ரன்களுக்கு ஆட்டம் இழந்த நிலையில், ஆஸ்திரேலிய அணியும் 104 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இதனை அடுத்து இந்திய அணி இரண்டாவது 2வது இன்னிங்ஸில் சுதாரித்து விளையாடிய நிலையில், ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலி சதம் அடித்தனர்.
இதனை அடுத்து 6 விக்கெட் இழப்பிற்கு 487 ரன்கள் என்ற நிலையில் இந்தியா டிக்ளர் செய்தது. இதனால் 534 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா விளையாடிய நிலையில், அந்த அணி அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 238 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இதனை அடுத்து 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி சொந்த மண்ணில் தோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியின் ஆட்டநாயகனாக கேப்டன் பும்ரா தேர்வு செய்யப்பட்டார். முதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்சில் மூன்று விக்கெட்டுகளையும், அவர் நிகழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 6ஆம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva