செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 7 ஜனவரி 2018 (18:27 IST)

சிஎஸ்கே-வின் பயிற்சியாளர் இவர்தான்....

ஐபிஎல் 2018 போட்டி இப்போதே கலைகட்ட துவங்கிவிட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு களமிறங்கும் சிஎஸ்கே அனியால் ஐபிஎல் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. தோனி, ரெய்னா, ஜடேஜா அணியில் தக்கவைக்கபட்டிருப்பது மேலும் ரசிகர்களை குஷியாக்கியுள்ளது. 
 
மற்ற வீரர்களின் ஏலம் நடக்க இன்னும் ஒருவாரம் இருக்கிறது. இந்நிலையில், சிஎஸ்கே அணி பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார். சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக்கேல் ஹஸ்சி நியமிக்கப்பட்டுள்ளார். 
 
42 வயதான மைக் ஹஸ்சி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 64 ஆட்டங்களில் விளையாடி 2,213 ரன்கள் எடுத்தவர். இது குறித்து ஹஸ்சி கூறுகையில், ஒரு வீரராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எனக்கு மறக்க முடியாத நினைவுகள் உண்டு. மறுபடியும் சென்னை அணியுடன் இணைந்து பணியாற்ற இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.