Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஏ+ கிரேட் வீரர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட தோனி?

Last Updated: வியாழன், 4 ஜனவரி 2018 (19:57 IST)
கிரிக்கெட் வீரர்களை பொதுவாக 3 முக்கிய கிரேடிங்கில் வகைப்படுத்துவர். அவை எ, பி, சி. இதில் கிரேங்கிற்கு ஏற்ப சலுகைகளும், சம்பளமும் வீரர்களுக்கு வழங்கபப்டும்.
ஏ கிரேடில் உள்ள வீரர்களின் சம்பளம் ரூ.12 கோடி. ஏ கிரேடில் விராட் கோலி, தோனி, அஸ்வின், ஜடேஜா, ரகானே, புஜாரா, முரளி விஜய் ஆகிய 7 வீரர்கள் உள்ளனர்.

பி கிரேடு வீரர்களுக்கு ஆண்டுக்கு ரூ.8 கோடி வழங்கப்படுகிறது. பி கிரேடில் ரோகித் சர்மா, ராகுல், முகமது ‌ஷமி உள்ளிட்ட 9 வீரர்கள் உள்ளனர்.
சி கிரேடு வீரர்களுக்கு ரூ.4 கோடி வழங்கப்படுகிறது. சி கிரேடில் தவான், மனிஷ் பாண்டே உள்ளிட்ட 16 வீரர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தோனியை ஏ+ வீரர்கள் பட்டியலில் இணைக்க மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக, தோனியின் சலுகைகள், சம்பளம், ஐசிசி ரேட்டிங் ஆகியவை பாதிக்கக்கூடும் என தெரிகிறது.


கிரிக்கெட் வீரர்களுக்கு ஏ+ கிரேட் கொடுப்பதற்கு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட வேண்டும். தோனி டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத காரணத்தினால், அவருக்கு எதற்கு உயர்ந்த கிரேட் என பல கேள்வி எழுப்பிவரும் நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அஸ்வின், ஜடேஜா போன்ற வீரர்கள் இந்திய அணியில் ரொட்டேஷன் பாலிசி காரணமாகவே விளையாடாமல் இருக்கிறார்கள். இதனால் இவர்களுக்கு ஏ+ கிரேட் கொடுக்கப்படும் என தெரிகிறது.


இதில் மேலும் படிக்கவும் :