வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 15 அக்டோபர் 2018 (11:17 IST)

ஆடுவதும், ஆடாததும் அவர் முடிவே: தோனிக்கு இவ்வளவு சலுகையா?

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிக்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறார். தோனியின் பேட்டிங் ஃபார்ம் தர்போது முன்போன்று இல்லை. 

 
எனவே, தோனியை உள்ளூர் போட்டிகளில் விளையாடும் படி மூத்த கிரிக்கெட் வீரர்கள் அவருக்கு அறிவுரை கூறியுள்ளனர். இந்நிலையில் தோனி உள்ளூரில் நடைபெறும் விஜய் ஹசாரே போட்டியின் நாக் அவுட் சுற்றில் அவர் ஆடுவார் என்று கூறப்பட்டது. பின்னர் அவர் விளையாடவில்லை என்ற கூறப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து ஜார்க்கண்ட் அணியின் பயிற்சியாளர் கூறியுள்ளது பின்வருமாறு, ஜார்க்கண்ட் அணி தற்போது சிறப்பாக விளையாடி வருகிறது. இந்த நேரத்தில் அணிக்குள் நுழைந்து சீர்குலைவு ஏற்படுத்த தோனி விரும்பவில்லை. 
 
அணி நல்ல நிலையில் இருப்பதால் அது அப்படியே நீடிக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். இதனால் தோனி விஜய் ஹசாரே போட்டியில் ஆடவில்லை. அவர் ஆடுவதும், ஆடாமல் இருப்பதும் அவரது முடிவே என தெரிவிக்கப்பட்டுள்ளது.