புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 19 மே 2018 (06:11 IST)

ஐபிஎல் கிரிக்கெட்: டெல்லியிடம் சென்னை தோல்வி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 52வது போட்டியில் நேற்று சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதிய நிலையில் சென்னை அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. டெல்லி அணி அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்துவிட்டாலும் அந்த அணிக்கு இதுவொரு ஆறுதல் வெற்றியாக அமைந்துள்ளது.
 
நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி, டெல்லி அணியை முதலில் பேட்டிங் செய்யுமாறு கேட்டுக்கொண்டது. இதனையடுத்து களமிறங்கிய டெல்லி, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 162 ரன்கள் எடுத்தது. 
 
இதனையடுத்து 163 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணியின் ராயுடு 50 ரன்கள் அடித்து அபாரமாக விளையாடியபோதிலும், மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் டெல்லி அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணியின் ஹர்ஷல் பட்டேல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.