Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஐதராபாத்தை வென்று பிளே ஆஃப் சுற்றை தக்க வைத்து கொண்டது பெங்களூரு

Last Modified வெள்ளி, 18 மே 2018 (05:04 IST)
ஐபிஎல் போட்டியின் 51வது போட்டியில் பெங்களூரு மற்றும் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் தோல்வி அடைந்தால் தொடரில் இருந்து விலக வேண்டிய இக்கட்டான நிலையில் இருந்த பெங்களூரு 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்து கொண்டது.

இந்த வெற்றியின் மூலம் 6 வெற்றிகள் 7 தோல்வி என்ற கணக்கில் 12 புள்ளிகளுடன் பெங்களூரு அணி 5வது இடத்தில் உள்ளது. சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் ஏற்கனவே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. அதேபோல் டெல்லி அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்துவிட்டது. இந்த நிலையில் கொல்கத்தா, மும்பை, பெங்களூர் , ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் ஆகிய ஐந்து அணிகளில் இரண்டு அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இனி பெங்களூரு மற்றும் ஐதராபாத் போட்டியின் ஸ்கோர் விபரங்களை பார்ப்போம்

பெங்களூரு அணி: 218/6
20 ஓவர்கள்

டிவில்லியர்ஸ்: 69
எம்.எம்.அலி: 65
கிராந்தோம்: 40
ஐதராபாத் அணி: 204/3 20 ஓவர்கள்

வில்லியம்சன்: 83
பாண்டே: 62
ஹேல்ஸ்: 37

ஆட்டநாயகன்: டிவில்லியர்ஸ்


இதில் மேலும் படிக்கவும் :