புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 30 அக்டோபர் 2017 (15:34 IST)

கோலிக்கு சிறந்த ஜோடி அனுஷ்கா இல்லையாம் இவர்தானாம்..... கலாய்க்கும் நெட்டிசன்கள்

கோலிக்கு அனுஷ்கா சர்மாவை விட ரோகித் சர்மாதான் சிறந்த ஜோடி என நெட்டிசன்கள் டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.


 

 
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையே நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது. இதில் ரோகித் சர்மா, கோலி ஆகியோர் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடி சதம் அடித்தனர்.
 
இந்த ஜோடி இந்திய அணி வெற்றிப்பெற பெரும் உதவியாய் அமைந்தது. இந்த ஜோடி 211 பந்துகளுக்கு 230 ரன்கள் குவித்தது. இந்த பார்ட்னர்ஷிப் முந்தைய சிறந்த பார்ட்னர்ஷிப் பட்டியலில் இடம்பிடித்தவர்கள் சாதனையை முறியடித்தது.
 
கோலி - ரோகித் சர்மா ஜோடி இதற்கு முன் பல போட்டிகளில் சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்தது குறிப்பிடத்தக்கது. இதனால் தற்போது டுவிட்டரில் நெட்டிசன்கள், கோலிக்கு சிறந்த ஜோடி அனுஷ்கா இல்லை ரோகித் சர்மா என பதிவிட்டு வருகின்றனர்.