கோலியை பார்த்து உணர்ச்சிவசப்பட்ட ரசிகர் கைது


Abimukatheesh| Last Updated: திங்கள், 30 அக்டோபர் 2017 (13:40 IST)
கான்பூர் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஒருநாள் போட்டியில் கோலி சதம் அடித்தபோது அவரது ரசிகர் ஒருவர் உணர்ச்சி வசப்பட்டு மைதானத்துக்குள் ஓடி வந்ததால் கைது செய்யப்பட்டார்.

 

 
நியூசிலாந்து - இந்தியா இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று கான்பூரில் நடைபெற்றது. இதில் இந்திய அணி வெற்றிப்பெற்று தொடரை கைப்பற்றியது. போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 337 ரன்கள் குவித்தது. ரோகித சர்மா மற்றும் கேப்டன் விராட் கோலி அபாரமாக விளையாடி சதம் அடித்தனர்.
 
விராட் கோலி சதம் அடித்தபோது, அவரது ரசிகர் ஒருவர் உணர்ச்சி வசப்பட்டு மைதானத்துக்குள் கோலியை நோக்கி கட்டிப்பிடிக்க ஓடி வந்தார். உடனே பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து அவரை பிடித்து தூக்கிச் சென்றனர். மேலும் போட்டியின்போது மைதானத்துக்குள் நுழைந்ததால், கிரிக்கெட் விதிகளை மீறிதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் மகிழ்ச்சியை அடக்க முடியாமல் கோலியை கட்டிப்பிடிக்க வந்ததாக கூறியுள்ளார். அதன்பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.


இதில் மேலும் படிக்கவும் :