வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : ஞாயிறு, 8 அக்டோபர் 2017 (14:34 IST)

டக்வொர்த் லெவிஸ் முறையால் குழம்பிய கோலி

ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் இடையே நடைபெற்ற முதல் டி20 போட்டியில் டக்வொர்த் லெவிஸ் முறையால் கேப்டன் விராட் கோலி குழம்பிபோனார்.


 

 
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட முதல் டி20 போட்டி நேற்று ராஞ்சியில் நடைபெற்றது. இதில் இந்திய அணி ட்க்வெர்த் லெவிஸ் முறைப்படி 9 விக்கெட் வித்தியாசத்தில்  வெற்றிப்பெற்றது. முதலில் ஆடிய  ஆஸ்திரேலிய அணி 18.4 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. 
 
இதனால் இந்திய அணிக்கு டக்வொர்த் லெவிஸ் முறைப்படி 6 ஓவர்களில் 48 ரன்கள் எடுக்க வேண்டும் என் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இருப்பினும் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.
 
இந்திய அணியின் வெற்றி குறித்து பேசிய விராட் கோலி டக்வொர்த் லெவிஸ் முறை குறித்து கூறியதாவது:-
 
உண்மையில் இந்த டக்வொர்த் லெவிஸ் முறை எப்படிதான் உள்ளது என தெரியவில்லை. மழை வந்ததால் ஆட்டம் 6 ஓவராக குறைக்கப்பட்டது. 6 ஓவருக்கு 40 ரன்கள்தான் இலக்கு இருக்கும் என நம்பியிருந்தேன். ஆனால், திடீரென 6 ஓவருக்கு 48 ரன்கள் தேவை என கூறியதும், டக்வொர்த் லெவிஸ் முறை எப்படிதான் கணக்கிடுகிறார்களோ என ஒருமுறை நினைத்துப் பார்த்தேன்.
 
இருப்பினும் நாங்கள் பவுலிங் மட்டுமல்லாமல்,, பேட்டிங்கிலும் சிறப்பாக விளையாடி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்று பெற்றது மகிழ்ச்சி என்றார்.