வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 5 ஜனவரி 2022 (08:44 IST)

நியூசிலாந்தை வீழ்த்தி வரலாற்று வெற்றி பெற்றது வங்கதேசம்!

நியூசிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி வீழ்த்தி வரலாற்று சாதனை செய்துள்ளது. 
நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி ஜனவரி 1ஆம் தேதி தொடங்கியது. 
 
இந்தப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 328 ரன்களும் வங்கதேச அணி 458 ரன்களும் எடுத்தன என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இரண்டாவது இன்னிங்சில் 169 ரன்கள் மட்டுமே நியூசிலாந்து எடுத்திருந்த நிலையில் வங்கதேச அணி வெற்றிபெற 42 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. 
 
இந்த நிலையில் வங்கதேச அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 42 ரன்கள் எடுத்து விட்ட நிலையில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. நியூசிலாந்து மண்ணில் வங்கதேச அணி வெற்றி பெற்றுள்ளது மிகப்பெரிய வரலாற்று சாதனையாக கருதப்படுகிறது