செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 3 ஜனவரி 2022 (10:29 IST)

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி: வங்கதேசம் அபார ரன்குவிப்பு!

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி: வங்கதேசம் அபார ரன்குவிப்பு!
நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி அபாரமாக ரன் குவித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. 
 
ஜனவரி 1ஆம் தேதி தொடங்கிய நியூஸிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 328 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது
 
நியூசிலாந்து அணியின் டெவான் கான்வே சதம் அடித்து அசத்தினார். இந்த நிலையில் தற்போது வங்கதேச அணி தனது முதலாவது இன்னிங்சை விளையாடி வருகிறது. அந்த அணி சற்று முன் வரை 6 விக்கெட் இழப்பிற்கு 375 ரன்கள் அடித்து உள்ளது என்பதும் கேப்டன் ஹக் மிக அபாரமாக விளையாடி 88 ரன்கள் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
தற்போது வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 47 ரன்கள் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.