திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 17 அக்டோபர் 2017 (18:36 IST)

வடபழனி ஃபோரம் மால்: இளைஞர் தற்கொலை!!

வடபழனி ஃபோரம் மாலில் இளைஞர் ஒருவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்பாடுத்தியுள்ளது.


 
 
வேலூரை சேர்ந்தவர் யுவராஜ். இவர் சென்னையில் ஒரு பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த பெண் இவரது காதலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். 
 
பல முறை கேட்டும் அந்த பெண் இவரது காதலுக்கு மறுப்பு தெரிவித்ததால் விரக்தி அடைந்த யுவராஜ், வடபழனியில் உள்ள ஃபோரம் விஜயா மால் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்டார். 
 
இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து வடபழனி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.