டெல்லியில் ஆங்கிலம் பேசியதால் இளைஞருக்கு சரமாரி தாக்குதல்!!


Sugapriya Prakash| Last Updated: செவ்வாய், 12 செப்டம்பர் 2017 (21:25 IST)
டெல்லியில் இளைஞர் ஒருவர் சரளமாக ஆங்கிலத்தில் பேசியதால் 5 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

 
 
டெல்லியில் உள்ள ஒரு 5 ஸ்டார் ஓட்டலுக்கு வெளியே நண்பரிடம் சரளமாக ஆங்கிலத்தில் உரையாடிய 22 வயது இளைஞரை 5 பேர் கொண்ட கும்பல் தாக்கிய சமபவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
அந்த இளைஞரின் பெயர் வருண் கலாதி. தனது நண்பரை ஓட்டலில் விட்டுசெல்ல வந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது. ஏன் ஆங்கில மொழியில் பேசுகிறாய்? என கேள்வி எழுப்பி அந்த கும்பலை சேர்ந்தவர்கள் வருணை தாக்கியுள்ளனர். 
 
இளைஞர் மீது தாக்குதல் நடத்திய கும்பலை சேர்ந்தவர்கள் குடிபோதையில் இருந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  கும்பலை சேர்ந்த மூவரை டெல்லி போலீஸார் கைது செய்து உள்ளனர். மேலும் இருவரை போலீஸ் தேடி வருகின்றனர்.
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :