ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : புதன், 9 ஆகஸ்ட் 2017 (09:49 IST)

முரசொலி பவள விழாவில் அழகிரி?: மீண்டும் திமுகவில் ஐக்கியமா?

முரசொலி பவள விழாவில் அழகிரி?: மீண்டும் திமுகவில் ஐக்கியமா?

என்னுடைய முதல் குழந்தை முரசொலி என திமுக தலைவர் கருணாநிதி அடிக்கடி சொல்வார். அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கருணாநிதியின் முதல் குழந்தையான முரசொலியின் பவள விழாவை சிறப்பாக நடத்த திமுக செயல் தலைவர் ஸ்டாலில் திட்டமிட்டுள்ளார்.


 
 
இந்நிலையில் முரசொலியின் ஆரம்பகால வளர்ச்சிக்கு திமுகவில் இருந்து தற்போது நீக்கப்பட்டுள்ள அழகிரி காரணமாக இருந்தார். மதுரையில் சைக்கிளில் சுற்று முரசொலி ஏஜெண்டுகளை நியமித்து, எமர்ஜென்சி காலங்களில் மத்திய அரசின் நெருக்கடிகளை கடந்து முரசொலி பேப்பரை விநியோகித்தது என அழகிரியின் பங்கு முரசொலிக்கு நன்றாகவே இருந்தது.
 
இதன் காரணமாக முரசொலி பவள விழாவுக்கு அழகிரியை அழைக்க மு.க.ஸ்டாலின் சம்மதித்துள்ளார். முரசொலியின் நிர்வாக மேலாண்மை இயக்குனர் உதயநிதியிடம் சொல்லி அழகிரியை ஸ்டாலின் அழைக்க சொன்னதாக தகவல் வருகிறது.
 
ஆனால் அழகிரி போன் எடுக்கவில்லை. அவரது மகன தயாநிதியிடம் போன் போட்டு விஷயத்தை சொல்லலாம் என்றால் அவரும் போனை எடுக்கவில்லை. அதன் பின்னர் முரசொலி செல்வத்துக்கு போன் போட்டு தகவலை சொல்ல அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் மூலம் அழகிரிக்கு தகவல் சொல்லப்பட்டிருக்கிறது.
 
ஆனால் அழகிரி அதற்கு சம்மதிக்கவில்லை. தன்னுடைய பெயர் அழைப்பிதழில் இல்லை என்பதை சுட்டிக்காட்டி தான் வந்தால் சரியாக இருக்காது என மறுத்துவிட்டாரும் அழகிரி. ஆனால் பலரது எதிர்ப்புக்கும் மத்தியில் ஸ்டாலின் அழகிரியை அழைக்க விரும்பியது முரசொலியின் வளர்ச்சிக்கு அழகிரி பணியாற்றியிருக்கிறார் என்பதற்காகத்தான். எனவே கடைசி நேரத்தில் ஸ்டாலினே அழகிரியை தொடர்பு கொண்டு அழைத்தால் கூட ஆச்சரியமில்லை என்கிறார்கள் திமுகவினர்.