Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தொல்.திருமாவளவன் 55வது பிறந்த நாள்; தினமும் 55 பேருக்கு பால் வினியோகம் (வீடியோ)

செவ்வாய், 8 ஆகஸ்ட் 2017 (19:27 IST)

Widgets Magazine

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவனின் 55வது பிறந்த தினத்தையொட்டி கரூர் அருகே தினந்தோறும்  55 பேருக்கு இலவசமாக ஏழை, எளியவர்களுக்கு அக்கட்சியின் மாநில துணை செயலாளர் தொழிலாளர் விடுதலை முன்னணி வா.மு.கதிரவன் பால் விநியோகம் செய்து வருகிறார்.


 

 
கரூர் அருகே வேலாயுதம்பாளையம் காந்திநகர் பகுதியில் குடியிருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநில துணை செயலாளர் வா.மு.கதிரவன், தன்னுடைய கட்சியின் தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவனின் 55வது பிறந்த தினம் வருகின்ற 17 ம் தேதி வர உள்ளதையடுத்து கடந்த ஒன்றாம் தேதி முதல் மாலை நேரங்களில் 55 குடும்பங்களுக்கு இலவசமாக பால் விநியோகித்து வருகின்றார். 
 
இந்த இலவச பால் விநியோகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், தற்போது 20க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நாள்தோறும் கூட்டம், கூட்டமாக குவியும் நிலையில் நாள்தோறும் 255 பேருக்கு பால் விநியோகித்து வருகின்றார். 
 
மாவட்ட செயலாளர் ஜெயராமன் தொடக்கி வைத்த இந்நிகழ்ச்சியில் நாள்தோறும், ஏழை, எளிய பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனர். ஆங்காங்கே கட்சித்தலைவர் மற்றும் ரசிகர் மன்றங்கள் என்ற பெயரில் பிளக்ஸ் மற்றும் கட் அவுட்டர்களுக்கு பால் அபிஷேகம் நடத்தி வரும் நிலையில், ஏழை, எளிய மக்கள் தன்னுடைய தலைவரின் பிறந்த தினத்திற்காக இலவசமாக பால் விநியோகித்து வரும் இவரது செயல் கரூர் மாவட்ட அளவில் மட்டுமில்லாமல் பிற மாவட்டங்களிலும் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது.
 
இந்த பால் விநியோகித்தினை தமிழக அரசு, அங்காடி மூலமாக ஏழை, எளிய குழந்தைகளுக்கு இலவசமாக கொடுக்க வேண்டுமென்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கதிரவன்  வலியுறுத்தியுள்ளார். 
 
இந்நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கரூர் ஒன்றிய செயலாளர் மு.தமிழ்மணி, மோகன்ராஜ், சி.சேகரன், இளங்கோவன், செல்வராஜ், சமத்துவ சந்தானம், துரைசெந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் - சி. ஆனந்தகுமார்
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

காதலுக்கு தூது போன பெண்ணை நிர்வாண ஊர்வலம் அழைத்து சென்ற கும்பல்...

தனது சகோதரரின் காதலுக்கு தூதுபோன ஒரு பெண்ணை நிர்வாணமாக்கி, ஊர்வலமாக அழைத்து சென்ற கொடூரம் ...

news

கருகலைப்பு செய்துக்கொண்ட 19 வயது மாணவி மரணம்

ஹைதராபாத்தில் கருகலைப்பு செய்துக்கொண்ட 19 வயது என்ஜினியரிங் மாணவி உயிரிழந்த சம்பவம் ...

news

ஜூலி ரொம்ப ஃபீல் பண்ணினா.. - சகோதரர் உருக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய ஜூலி, தன்னுடைய வீடியோக்களை பார்த்து மிகவும் மனம் ...

news

மனித கழிவுகளிலிருந்து எரிபொருள் தயாரிக்கும் கென்யா

கென்யா நாட்டைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று மனித கழிவுகளிலிருந்து எரிபொருள் தயாரித்து ...

Widgets Magazine Widgets Magazine