Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கழிவறை இல்லையா? அப்ப ரேசன் பொருட்கள் கிடையாது. புதுவை அரசு அதிரடி

புதன், 9 ஆகஸ்ட் 2017 (05:47 IST)

Widgets Magazine

ஒவ்வொரு வீட்டிற்கும் கழிவறை அவசியம், அத்தியாவசியம் என மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி வருவதோடு, கழிவறை கட்டுவதற்கு மானியம் மற்றும் நிதி கொடுத்து உதவுகின்றன. இந்த நிலையில் புதுவை அரசு அதிரடியாக கழிவறை இல்லாத வீட்டிற்கு ரேசன் பொருட்கள் இல்லை என்று அறிவித்துள்ளது 
 
இதுகுறித்து புதுவை அரசு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: 'கழிப்பறை கட்ட வசதியில்லாத புதுச்சேரி மக்களுக்குக் கழிப்பறை கட்டிக்கொள்ள 20 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகின்றது. இந்த நிதிதான் நாட்டில் வழங்கப்படும் நிதிகளிலேயே உயர்வானது. ஆனால், இந்த நிதியைப் பெற்ற பயனாளிகளின் செயலின்மையால், அகில இந்திய அளவில் பொது சுகாதாரம் மற்றும் தூய்மையான நகரங்களின் தரவரிசை குறித்து எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் புதுச்சேரி நகராட்சி 189-வது இடத்திலும் உழவர்கரை நகராட்சி 206-வது இடத்திற்கும் தள்ளப்பட்டிருக்கிறது. அதனால், புதுச்சேரி அரசின் கழிவறை கட்டும் நிதியைப் பெற்றவர்கள் வரும் 20-ம் தேதிக்குள் கழிவறைகளைக் கட்டத் தவறினால், அவர்களுக்கு அரசின் நலத்திட்டங்களை நிறுத்த வேண்டுமென முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கழிவறைகளைக் கட்டி முடிக்கவில்லை என்றால் கட்டி முடிக்கப்படும் வரை அவர்களுக்கு ரேஷனில் வழங்கப்படும் இலவச உணவுப் பொருள்கள், பிரதமரின் வீடு கட்டும் திட்டம், கல்வி உதவித் தொகை உள்ளிட்ட அரசின் அனைத்துத் திட்டங்களும் நிறுத்தப்படும். கழிவறைகளைக் கட்டி முடித்தவர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்குத் தகுதியுடமை இருப்பின் அரசின் வீடு கட்டும் திட்டத்தில் அவர்களின் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்' இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனை அடுத்து மானியம் பெற்றவர்கள் உடனடியாக கழிவறை கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

பெங்களூர் சிகிச்சையால் பலன்: அகமது பட்டேல் வெற்றி

குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மாற்றி வாக்களிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டதால் ...

news

தம்பதிகள் உடலுறவை ஹெலிகாப்டரில் இருந்து வீடியோ எடுத்த முன்னாள் போலீஸ் கைது

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர் தோட்டம் ஒன்றில் உடலுறவு ...

news

கன்னடம் தெரியாதா? அப்ப வேலையை விட்டு போ! அராஜகம் செய்யும் கர்நாடக அரசு

கர்நாடகாவில் உள்ள வங்கிகளில் அனைத்து மாநிலத்தை சேர்ந்தவர்களும் பணிபுரிந்து வருகின்றனர். ...

news

சகோதரனின் காதலுக்கு உதவிய பெண்ணை நிர்வாண படுத்திய கிராமம்!!

மஹாரஷ்ரா மாநிலத்தில் சகோதரின் காதலுக்கு உதவியதால் பெண்ணை நிர்வாணமாக்கி கிராமத்தை சுற்றி ...

Widgets Magazine Widgets Magazine