திங்கள், 11 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 30 ஏப்ரல் 2019 (22:03 IST)

அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் இல்லாமல் சபாநாயகர் மீது ஏன்?

3 எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் தனபால் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் இயற்ற போவதாக திமுக அறிவித்துள்ளதை அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
 
அதிமுக என்ற கட்சி அந்த கட்சிக்கு எதிராக வேலை செய்த எம்.எல்.ஏக்கள் மீது அந்த கட்சியின் கொறடா கொடுத்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்க சபாநாயகர் தீர்மானித்துள்ள நிலையில் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு வக்காலத்து வாங்கும் வகையில் திமுக, சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது
 
ஒருவேளை திமுக எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் அக்கட்சிக்கு எதிராக இருந்தால் திமுக தலைவர் நடவடிக்கை எடுக்க மாட்டாரா? மேலும் தேர்தல் முடிவுக்கு பின் ஒருவேளை அதிமுகவுக்கு மெஜாரிட்டி கிடைத்துவிட்டால், திமுக இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வராது. அதேபோல் மெஜாரிட்டி கிடைத்துவிட்டால், அதிமுகவும் 3 எம்.எல்.ஏக்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காது. 
 
மொத்ததில் தேர்தல் முடிவுக்கு முன் ஆட்சியை காப்பாற்றி கொள்ள அதிமுகவும், ஆட்சியை கவிழ்க்க திமுகவும் 3 எம்.எல்.ஏக்கள் விவகாரத்தை பயன்படுத்தி கொள்வதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.